மீண்டும் ஓர் அற்புதமான படைப்பு.
நாம் அனைவரையும் பெருமைபடவைக்கும் ஓர் படைப்பு என்றே சொல்லலாம்.
மனதை உறைய வைக்கும் நிகழ்வுகளை கொண்ட ஓர் திரைப்படம், உண்மை சம்பவங்களையும், அதன் ஞாயங்களையும் பிரதிபளிப்பதோடுமட்டுமல்லாமல் காண்பவர் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்து நிற்கின்றது.
மீனவரின் வாழ்கை எவ்வளவு கடினமானது என்று அனைவருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். இத்திரைப்படம் அதனை உணரவைக்கின்றது.
கதையின் நாயகன் குடி போதைக்கு அடிமைப்பட்டு பிச்சை எடுத்து குடிக்குமலவிர்க்கு கேவலமாக சித்தரிக்க பட்டு, பின் படிபடியாக அவரின் மாற்றத்தை சித்தரித்த விதம் அருமை.
ஓர் பெண் ஓர் மனிதனின் வாழ்கையில் எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறாள் என்பதையும், அவள் அவனது வாழ்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கும் இத்திரைப்படம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. பெரும்பாலான ஆண்களின் வாழ்கையில் இரு பெண்களுக்கு முக்கிய பங்குண்டு. ஒன்று தாய் மற்றொன்று துணைவி.
பார்பதற்கு எளிமையான தோற்றத்துடன் காணப்படும் நாயகி திறம்பட நடித்துள்ளார். ஓர் மனிதனை, பிச்சை எடுத்து குடிகுமலவிர்க்கு தன்னை தாழ்திக்கொண்டவனை, மாற்றி, ஓர் காட்சியில் "நீ இவ்வூரின் தலைவனாக வேண்டும்" என்னுமளவிற்கு எடுத்துச்செல்வது நெஞ்சை நெகிழவைகின்றது.
ஓர் தாய் தன் மகனின் தீய பழக்கத்திற்கு துணை போவது போல காட்சி அளித்தாலும், அவனை ஓர் நல்ல மனிதனாக்க வேண்டும் எனும் வேட்கை அவளுக்குள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை மிக ஆழகாக திரயமைதுள்ளார் இயக்குனர். மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பி ஓடி வரும் மகனை அக்கணமே அழைத்துக்கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு வரும் காட்சி அருமை.
பின்னணி இசை அற்புதம்.
இத்தகைய ஆழமான கதைகளுக்கு ஏற்ப அமைந்திருந்தது. படம் பார்க்கையில் நமது உணர்வுகளை கூட்டு வதற்கு இசை பக்க பலமாக இருந்தது.
நாயகி கடற்கரையில் காத்திருக்கையில் வரும் சோகப்பாடலின் வரிகள்..
“நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்“
ஆழமாக மனதில் பதிந்தது.
திரைப்படம் முழுவதும் ஒருவரின் நடிப்பு ஈர்த்துக் கட்டிப்போட்டது. நாயகனின் தந்தை. ஊர்முழுவதும் அடித்து விரட்டுமலவிர்க்கு அவமானம் சம்பாதிக்கும் மகன். தன்னிடம் தனி படகு இல்லாததால் இன்னொருவரின் படகில் வேலை செய்துவருகிறார். அந்த வேலைக்கு கூட உலை வைக்கும் மகன்.
திருந்தி வாழ துடிக்கும் மகன்.
தன்னை பெருமைபட செய்த மகன்.
கடலுக்கு சென்று திரும்பாத மகன்.
நடுக்கடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து மடிந்து கிடக்கும் மகன்.. இவ்வனைத்து காட்சிகளிலும் நாயகனின் தந்தை தனது உணர்வுகளை அற்புதமாக வெளிபடுத்தியுள்ளார்.
உலகில் எப்போதும் எங்கோ ஓர் நல்லவன் இருந்து கொண்டு தான் இருக்கிறான். அவனுக்காக இவ்வுலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது எனும் நம்பிக்கையை உணரவைப்பது போல் ஓர் கதாபாத்திரம். படகு தயாரிக்கும் முஸ்லிம் கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் சமுத்திரகனி.
மீனவர்கள் புயலில் சிக்கி இறப்பதையும், கடல் நடுவில் சுட்டு கொல்லப்படுவதையும் எப்போதும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம், உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமானால் பெரும்பான்மையானோருக்கு அது பழகியே விட்டது. ஆனால் அத்தகைய நிகழ்வுகளால் ஓர் தனி மனிதன், அவனது மனைவி, பெற்றோர், குழந்தை என அவர்களின் குடும்பம் சந்திக்கும் வலிகளையும், வேதனைகளையும் மிக நெருக்கமாக சித்தரித்துள்ளார் இயக்குனர்.
இத்தகைய படைப்புக்கு இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் குழுவினர்க்கு நன்றிகள், பாராட்டுக்கள்.
