Tuesday, March 13, 2007

மொழி - என் பார்வையில்


"அன்பே சிவம்" படம் பார்த்த பின் இப்படி ஒரு மனநிறைவு கிடைத்தது, நம் நாட்டில் இத்தகைய தரமான திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

இப்போது "மொழி" திரைப்படத்தை பார்த்த பின் அதே உணர்வு, நிறைந்த மனதோடு திரையரங்கத்தை விட்டு வெளியேறினேன்.

"சந்தோஷம்" அதுவே படம் முழுவதும் நிறைந்திருந்தது. திரைக்கதையில் சில கணத்தக் காட்சிகள் கூட காதலினால் ஏற்படும் சுகமான வேதனைகளே.

பொதுவாக கல்லூரி நாட்கள் முடிவடையும் தருவாயில் எல்லோரும்
"Slam Book" எனப்படும் நினைவுப்பதிவு புத்தகத்தில் தங்கள் நண்பர்களைப் பற்றிய விவரங்களை சேகரிப்பது வழக்கம், அதில் "Favourite Movies" என ஓர் பகுதி காணப்படும். அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு மிகப்பிடித்தமான (அ) தங்கள் மனதைக் கவர்ந்த திரைப்படங்களை குறிப்பிடுவார்கள், இனி வரும் நாட்களில் பலர் தங்களது "Favourite Movie" யாக 'மொழி" திரைப்படத்தைக் குறிப்பிடுவார்கள் என எனக்கோர் ஆணித்தரமான நம்பிக்கை.


இப்படத்தை பார்க்கும்போது எனக்குள் ஓர் ஆரோக்கியமான குற்ற உணர்வு ஏற்பட்டது. நான் பணிபுரியும் அலுவலகத்தில் இத்திரைப்படத்தில் வரும் அர்ச்சனா (ஜோதிகா) போல வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத சிலர் உள்ளனர், இவர்களோடு நான் அதிக நேரம் செலவிடவில்லையே என்ற குற்ற உணர்வே அது. நேற்று வரை அவர்களின் சைகை மொழி தெரியாது. ஆனால் இன்று "A - Z" எப்படி சைகை செய்வது என்று அவர்களில் ஒருவரிடம் கற்றுக்கொண்டேன்.

மேலும் இம்மொழியை நன்றாகப் பயிற்சி செய்து அவர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

"The One Who Saves One Life, Saves The World Entire" என "Shindler's List" எனப்படும் உலகப் புகழ்பெற்ற திரைப்படத்தில் மையக்கருத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் பார்க்கையில் ஓர் சாதாரண மனிதனான எனக்குள், ஓர் நாளில் இத்திரைப்படம் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமெனில், இத்திரைப்படம் சமுதாயத்தில் ஒரு ஆரோக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இத்தகைய உயர்ந்த உன்னதமான சிந்தனைக்கு இயக்குநர் ராதாமோகனுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

இத்தகைய சிறந்த திரைப்படத்தை உருவாக்க ஆயுதமாய் இருந்த தயாரிப்பாளர் "பிரகாஷ் ராஜ்"அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இத்திரைப்படம் பல சிறந்த விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன். .!

10 comments:

muthupalaniappan renganathan (aka RMP) said...

I take this an opportunity to appreciate both the movie and this post. First thing about the post was it is right from the heart, and writing a review about a movie is nothing new but this particular post is more than a review, you have told the impact the movie has made within you, also some confessions which really needs a big heart to put it in a web. I pray sincerely to god that this movie does a good business and encourage other young bunch of talents in tamil nadu. Let masala movies leave way to these kinds. Well done to whole crew of Mozi for provoking many human kinds like musiano.

Ranga said...

Mohan, I am surprised to see the review. You have one more job in your hand. You can explore in this area also. The review of you has increased the eagerness in me for watching the movie "Mozhi". All the best.

Unknown said...

As we stepped out of the theater after watching this film i felt a difference in you. I knew that definitely there will be an impact on you. But i never expected such a deep impact on you. I am happy that you leading others in a good track. Keep it up my friend.

Unknown said...

Mohan, That really was an excellent n fair review about the film. It really provokes the interest to watch the movie.Ur review not only spks abt the film but it also shows the impact which it has created on people like u, which itself is a grand success for the film.These days where films are commercially driven, a film like "MOZHI" needs a high appreciation n support.Such reviews would certainly add another feather to the cap.

Thangalin tharamana vimarsanathirkku paaratukkal..

Vidhya

Deepak Narayanan G said...

Man o man, what can i say? not everybody will come up with such a lovely review...would have felt even more happy if you had put this in english too....

Mozhi as the name calls....even this review of yours can be called as another mozhi....Kudos to you mohan....

வினையூக்கி said...

மியுஸியானோ, உளப்பூர்வமான , மொழிப்படத்தைப் பற்றிய உங்கள் பார்வை அருமை. வெகுசில படங்களை மட்டுமே நாம் குறைகள் இருந்தாலும், குறைகளை சொல்ல மனது வராது.அவைகளில் ஒன்றுதான் மொழி படமும். தங்களின் முதற் முயற்சியே சிறந்த ஒரு படத்தைப் பற்றி அமைந்ததில் தங்களின் நெடு நாளைய ரசிகன் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள். மேலும் மேலும் எழுதுக, தமிழிலும் ஆங்கிலத்துலும் எழுதுக

வினையூக்கி said...

//சந்தோஷம்" அதுவே படம் முழுவதும் நிறைந்திருந்தது.//இதுதான் இந்தப் படத்தின் வெற்றியே. நீங்கள் அதை சுட்டிக்காட்டியது அருமை

வினையூக்கி said...

//இப்படத்தை பார்க்கும்போது எனக்குள் ஓர் ஆரோக்கியமான குற்ற உணர்வு ஏற்பட்டது//

இதை நானும் உணர்ந்தேன், மியுஸியானோ.

வினையூக்கி said...

//இத்திரைப்படம் சமுதாயத்தில் ஒரு ஆரோக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்//
உங்களுடைய எதிர்பார்ப்பு நிச்சயம் பூர்த்தி ஆகும் தோழா!!! :-)

none said...

வினைவூக்கி அண்ணா ப்ளாக் ல இருந்து உங்கள் ப்ளாக் க்கு வந்தேன்.
Saw your comment on his blog.

'மொழி' திரைபடத்தை நான் இன்னும் பார்க்கலை. பார்க்கணும்னு ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருக்கேன். அந்த ஆர்வத்தை உங்க பதிவு மேலும் கூட்டி இருக்கு.

அதுவும் 'Schindlers list' திரைபடத்தை பத்தி நீங்க இங்க சொன்னது அருமை.
ரொம்ப தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.

Coincidentally, i am currently reading Paulo Coelho's 'The Alchemist' book.